Posts

பொங்கல்

 தெளித்த நீர் கூட காயாதப் பொழுதில்  வாசல் படர்ந்த கோலத்தைச் சுவைத்த எறும்பு நான் மென்று போட்ட சக்கையைச்  சுவைக்காமல்  ஏன் என் காலை பதம் பார்க்கிறது? 

பீலி

 உந்தன் தலைமுடியை கொஞ்சம் கோதிவிடுகிறாயா? மயிலிறகைத் தேடி தேடி அலுத்துவிட்டது

விண்மீன்

 மேல் மின்னும் விண்மீனைப் பொறுக்கித் தரத்தான் இயலவில்லை மடித்துக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வாயா? #ஓரிகாமி